நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது – ஆளுநர்

ஒரு சமுதாயம் முன்னேறவேண்டும் எனில் அந்த சமுயதாயத்தின் அடிப்படை நியாயமானதும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்ற பாரிய கொள்கை இருக்கவேண்டும் . நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

கார்கில்ஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பிள்ளைகளுக்கான கார்கில்ஸ் சாரு பிமா உழவர் சமூக நன்மை மற்றும் உதவித்தொகை வழங்கும் 2018 -2019 நிகழ்வு 04 ஒக்ரோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கில் இடம்பெற்றறது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புலமைப்பரிசில் திட்டம் வழங்கும் இந்த நிகழ்வில் ஆண்டு 5 மற்றும் ஆண்டு 11 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையினையும் , பல்கலைக்கழக மாணவிக்கான மடிக்கணனியினையும் ஆளுநர் அவர்கள் இதன்போது வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் , முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் , மாகாண விவசாய பணிப்பாளர் ,காகில்ஸ் நிறுவனத்தின் வியாபார மற்றும் விவசாய குழு முகாமையாளர் ஹரிதாஸ் பெர்ணான்டோ மற்றும் விவசாயிகள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு