நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா 06.01.2021 அன்று காலை 11.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதம செயலாளர் கலந்துகொண்டிருந்தார். மேலும் ஆளுநரின் செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், கூட்டுறவு சங்க  தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

முதலாவதாக, கூட்டுறவு சங்கத்தினுடைய பல்பொருள் அங்காடியை  திறந்துவைத்து  அதனை பார்வையிட்டதோடு கௌரவ ஆளுநர் அவர்களால் பலநோக்கு கூட்டுறவு சங்க வங்கியின் நானாட்டன் கிளையையும்  திறந்து வைத்து பயனர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டது. மற்றும் சிறுவர் சேமிப்பு கணக்குகளை ஆரம்பித்த சிறுவர்களுக்கு சேமிப்பு புத்தகங்கள் கௌரவ ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது. அதன் பின் கூட்டுறவு சங்க அலுவலக கட்டடம் கௌரவ ஆளுநரால் திரைநீக்கம் செய்து திறந்துவைக்கபட்டது.

இதன்போது சிறப்புரை ஆற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் நானாட்டான் கூட்டுறவு சங்கத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு சங்கம் ஏனைய மாகாணங்களை விட பின்தங்கி உள்ளதை சுட்டிக்காட்டியதோடு அதற்கு காரணமாக கூட்டுறவு சங்கத்தினர் யுத்த காலம் மற்றும் அதற்கு பின்னைய காலத்தில் உலர் உணவு திட்டத்தில் தங்கியிருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும் உலர் உணவு திட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தங்களது சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டனர் என தெரிவித்தார்.

மேலும், வடக்கு கிழக்கின் வாழ்வாதாரம் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்டது என கூறியதோடு கூட்டுறவு சங்கத்தினர் தங்களுடைய சங்கங்களை வளர்ப்பதற்கான மாற்று வழிகளை தேடி பெற்றுகொள்ள வேண்டும். அத்துடன் புதிய வியாபார தந்துரோபாயங்களை கற்றுக்கொண்டு தனியார் துறை வியாபாரிகளுடன் போட்டிபோடும் அளவிற்கு மீண்டும் கூட்டுறவு சங்கங்களை வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவற்றை பெற்றுகொள்ள முடியாது என்பதனை சுட்டிக்காட்டியதோடு பலநோக்கு கூட்டுறவு சங்க உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் அதற்காக திறன்பட செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.