நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

No Deposit Bonus Casinos in the USA for 2023 [Free Bonuses]

14 ஒக்ரோபர் 2023 அன்று காலை 7.30 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் காங்கேசந்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது.

காங்கேசன்துறை வந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தார்த்தன் மற்றும் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு கப்பலை வரவேற்றனர்.

நாகப்பட்டினத்திலிருந்து 50 பயணிகளுடன் புறப்பட்ட
பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டெல்லியிலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த செரியாபாணி கப்பல் பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் நாகபட்டினம் நோக்கி 30 பயணிகளுடன் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.