நடமாடும் சேவை – வட மாகாணம் ஆயுர்வேத வைத்திய சபை – சுகாதார அமைச்சு

ஆயுர்வேத வைத்திய சபையினால் வடக்கு மாகாணத்தில் நடமாடும் சேவையானது நடாத்தப்பட்டது. பதிவு செய்த வைத்தியர்கள் மற்றும் பதிவினை எதிர்பார்த்துள்ளவர்களிற்கான சேவைகளை வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நடமாடும் சேவையானது வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் முறையே 18.07.2023, 19.07.2023 (கிளிநொச்சி, மன்னார்), 20.07.2023 ந் திகதிகளில் நடைபெற்றது.

இந் நடமாடும் சேவையை வடக்கு மாகாணத்தில் நடாத்துவதற்கு ஏற்ற சகல ஒழுங்குகளையும் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமானது மேற்கொண்டிருந்தது. இச் சேவையில்
1. வைத்திய சான்றிதழ் புத்தகங்கள் வழங்குதல்.
2. வைத்திய அடையாள அட்டை வழங்குதல்.
3. ஆயுர்வேத மருத்துவ சபையின் சான்றிதழ் நகலை வழங்குதல்.
4. வாகனங்களிற்;கான இலட்சனை வழங்குதல்.
5. ஆயுர்வேத வைத்திய சபை சான்றிதழ் பதிவினை புதுப்பித்தல்.

ஆகிய சேவைகள் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டதுடன் யாழ் மற்றும் வவுனியா மாவட்டத்தில் பாரம்பரிய பதிவினை எதிர்பார்த்துள்ள விண்ணப்பதாரர்களை பாரம்பரிய வைத்தியர்களாக பதிவு செய்வதற்கான வாய்மொழி பரீட்சையும் நடைபெற்றது. இப் பரீட்சைக்கான குழுவின் தலைவராக மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் அவர்கள் நியமிக்கப்பட்டதுடன் இப் பரீட்சைக்கான குழுவானது ஆணையாளர் அவர்களால் நியமிக்கப்பட்டது.

இந் நடமாடும் சேவையின் மூலம் வாய்மொழி பரீட்சைக்கு 17 விண்ணப்பதாரிகள் சமூகமளித்திருந்ததுடன் ஏறத்தாழ 150 வைத்தியர்கள் நன்மையடைந்திருந்தனர்.