வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் வவுனியா மாவட்டத்தில் இயங்கும் அரச விதை உற்பத்திப்பண்ணை, 05 மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் அச்சுவேலி பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்தலையும் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும் விற்பனை நடைபெற்று வருகின்றது. மேலும் பசுமையான நாட்டினைக் கட்டியெழுப்புவதற்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை வழங்கும் நோக்கமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நடமாடும் சேவை தொடர்பான மேலதிக விபரங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளது
Loading...