தொழிற்துறை திணைக்களத்தினால் வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களம் வட மாகாணம் ILO நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் LEED+ செயற்திட்டத்தின் பயனாளிகளான மாற்று வலுவுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கும் கலந்துரையாடல் முதலாம் கட்டமாக யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் தலைமை அலுவலக உத்தியோகத்தர்களுக்கு 15.11.2021 தொடக்கம் 17.11.2021 வரை யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

பயிற்சிநெறியின் மூன்றாம் நாள் (17.11.2021) பிரதம செயலாளர், வட மாகாணம் அவர்கள் கலந்து கொண்டதுடன் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களினையும் வழங்கினார்.