தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு கைதடி முதியோர் இல்லக் கலாச்சார மண்டபத்தில் 12 மார்ச் 2019 அன்று நடைபெற்றது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. அ.பத்திநாதன் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாகவும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்களின் சிபாரிசுக்கும் வழிநடத்தலுக்கும் அமைவாகவும் இந் நிகழ்வானது தொழிற்துறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் க.ஸ்ரீமோகனன் தலைமையில் நடாத்தப்பட்டதுடன் பிரதமவிருந்தினராக பிரதிப் பிரதமசெயலாளர் – நிர்வாகம் திருமதி. ச.மோகநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மகளிர் விவகார அமைச்சின் பிரதம கணக்காளர் திரு.எஸ்.விஸ்ணுகுமார் அவர்களும் தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.கே.நிரஞ்சன் அவர்களுடன் தொழிற்துறைத் திணைக்களத்தின் கணக்காளர் திரு. எஸ்.காண்டீபன் அவர்களும் தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தோர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் வருடாந்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (PSDG)  – 2018 ஊடாக தொழில் பயிற்சி அதிகார சபை ஊடாக தொழில் பயிற்சியை நிறைவு செய்த 160 தொழில் முயற்சியாளர்களில் 80 தொழில் முயற்சியாளரிற்கு தலா 40>000.00 பெறுமதியான சுய தொழில் உபகரணங்களும் 80 தொழில் முயற்சியாளரிற்கு பயிற்சிக்கால ஊக்குவிப்பு படியாக ரூபாய் 10>000.00 இற்கான காசோலையும்  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது இனிவரும் காலங்களில் தொழிற்துறைத் திணைக்களத்தின் வருடாந்த நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்படும்.

 

உபகரணம் வழங்கப்பட்ட தொழிற்துறைகளாவன:-

  1. அலுமினியம் பொருத்துகை உபகரணங்கள்
  2. தச்சு வேலைபட்டறை உபகரணங்கள்
  3. மின் ஒட்டுவேலை உபகரணங்கள்
  4. வீட்டு மின்சுற்று உபகரணங்கள்
  5. நீர் குழாய் பொருத்துகை வேலைக்கான உபகரணங்கள்