சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

Caesars Entertainment Resorts in the USA — And What That Means for Gamblers

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் Mr. Damiano Sguaitamatti அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (23) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் மீண்டும் சுவிஸிற்கு திரும்பவுள்ள Mr.Damiano அவர்கள் மரியாதை நிமித்தம் கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு