‘சில்ப அபிமானி’ – மாகாண கைப்பணிப் போட்டி 2021

உள்ளூர் கைப்பணி கலைஞர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து வருடாந்தம் நடாத்தும் மேற்படி போட்டி சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இவ்வாண்டும் ஓக்ரோபர் 23ம் திகதி யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாகாணப்பணிப்பாளர், தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர், பணிப்பாளர், போட்டிக்கான நடுவர்குழு உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடன் போட்டி நடைபெற்றது.

Online Casinos That Let You Play for Free!

வடமாகாண ரீதியில் 1700 கைப்பணி ஆக்கங்கள் கைப்பணியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. இப் போட்டியில் 23 முதலாம் இடங்களும், 24 இரண்டாம் இடங்களும், 25 மூன்றாம் இடங்களும் மற்றும் 189 திறமைப் பரிசுகளுடன் மொத்தமாக 261 ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டன. மேலும் மாகாண மட்ட போட்டியில் தெரிவாகிய ஆக்கங்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற 72 ஆக்கங்கள் தேசிய போட்டியான ‘சில்ப அபிமானி’ ஜனாதிபதி விருது கைப்பணிப் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டு அப்போட்டியில் எமது மாகாணத்திற்கு 5 முதலாம் இடங்களும் 01 இரண்டாம் இடமும், 02 மூன்றாம் இடங்களும் மற்றும் 19 திறமைப் பரிசுகளுடன் மொத்தமாக 27 ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டன.

மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும், பணப்பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

Gambling Blog