கௌரவ ஆளுநர் தலைமையில் வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  இன்று (06) இடம்பெற்றது.

டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்தப்பட்டதோர் மாகாணமாக வட மாகாணத்தினை மாற்றிடும் தேசிய குறிக்கோளினை அடைவதே இதன் நோக்கமாகும். இந்த திட்ட வரைபில் ஸ்மாட் பாதுகாப்பு , ஸ்மாட் அரசாங்கம், ஸ்மாட் சுகாதாரம்,ஸ்மாட் கட்டடம், ஸ்மாட் பாவனைகள் , ஸ்மாட் பணம், ஸ்மாட் கல்வி , ஸ்மாட் தொழிலாளர்கள் , ஸ்மாட்  போக்குவரத்து மற்றும் ஸ்மாட் உட்கட்டமைப்பு ஆகியன உள்ளடங்குகின்றன.

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் தொலைத்தொடர்பாடல் அதிகாரிகள் இந்த செயற்திட்டங்கள் குறித்து வடமாகாணத்தின் செயலாளாகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் , திணைக்களங்களின் தலைவர்கள் , பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராமசேவகர்கள் ஆகியோருக்கு தெளிவுபடுத்தினர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நம் தேசத்தில் இழக்கப்பட்டவற்றை மீள துரிதமாகப்பெற்றுக்கொள்ள டிஜிட்டல்மயமாக்கல் சிறந்த வழியாகும். அதற்கான வாய்ப்பு எமக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்துவோம் என்று கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் , ஆளுநரின் செயலாளர் , முதலமைச்சு செயலகத்தின் பிரதம செயலாளர் ஏ. பத்திநாதன்,  ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமத் தலைவர் பி.ஜி. குமாரசிங்க சிறிசேன, மொபிட்டல் தலைமை நிர்வாக அதிகாரி நளின் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.