கௌரவ ஆளுநர் எண்ணக்கருவிற்கு அமைவாக யாழில் புத்தக கண்காட்சி

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (24) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த கண்காட்சியினை ஏற்பாடு செய்யும் இலங்கை நூல் விற்பனையாளர்கள் ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.