கௌரவ ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

– வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு