கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் 2023

கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 18.10.2023 அன்று கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஆறு பயனாளிகளுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தலா ஒவ்வொரு பயனாளிகளுக்குமாக மொத்தமாக 15 பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறித்த நிகழ்வில் பயனாளிகள் தமது வாழ்வாதாரத்துக்கான தொழில் முயற்சிகளை மிகவும் நம்பிக்கையுடன் தொடர்வதாகக் கூறி வடக்கு மாகாண சபைக்குத் தங்களது நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.

More Casinos That Got Lucky with Great Names - PokerListings

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் (தலைமைப்பீடம்) திருமதி.ஹ.சத்தியஜீவிதா அவர்களும் கிளிநொச்சி மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.சு.ஜெயனந்தராசா அவர்களும் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.உதயனி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.