கிளிநொச்சியில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 27 மார்ச் 2019 அன்று நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாணத்தின் அரச முதியோர் இல்லத்திற்கான  ஆரம்ப தர உத்தியோகத்தர்கள் பத்து பேருக்கான  நியமனக்கடிதங்கள் ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்டன. குறித்த பதவிநிலைக்காக 14பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் 10 பேர் மட்டுமே இன்று வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.