கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட கறுக்காய்தீவு – காவைக்குளம் வீதியில் இரண்டு பாலங்கள், வன்னேரி – பல்லவராயன்கட்டு வீதியில் இரண்டு பாலங்கள் மற்றும் வன்னேரிக்குளம் – ஜெயபுரம் வீதிப்பாலம் ஆகிய ஜந்து பாலங்கள் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் தவிசாளர் அவர்களால் 20 ஜனவரி 2020 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.