கல்வித்துறை சார்ந்த கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல்.

 வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களுடைய தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 03 டிசெம்பர் 2020 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வித் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தற்;போது கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கலை கலாச்சார துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை சார்ந்த பிரச்சனைகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய கொள்கைகளை குறித்த துறைசார் உத்தியோகத்தர்கள் கௌரவ ஆளுநரிடம் ஒவ்வொன்றாக தெரிவித்தனர்.

Best Real Money Slot Apps You Can Play From Home orgo: Online Slot Casino Real Money

இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் கல்வித்துறையிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, பால்நிலை சமத்துவம், வர்க்க வேறுபாடுகளுக்கு இ,டம் கொடாமல் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலை கல்வி ஆகியவற்றில் பாடவிதான, புறநிலை மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு அறிவூட்டுவதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார், மேலும் பாடசாலைகளை சமூக மட்டத்தில் கட்டியெழுப்புவதற்கு பெற்றோர், பாடசாலைகளின் அருகில் உள்ள சமூகத்தில் வசிப்பவர்கள், மதகுருமார்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இணைந்து குழு ஒன்றை அமைத்து அதனூ}டாக சில விடயங்களை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். அத்தோடு பரீட்சைகளின் மூலம் மாணவர்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமை என்பவற்றை அளவிட முடியாது எனவும் அவர்களுடைய அடைவு மட்ட குறைபாடுகளுக்கான சரியான காரணங்களில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுட்டிக்காட்டினார்.
மாணவர்கள் கற்கை நெறி ஒன்றை பூர்த்திசெய்து வெளியேறும் பொழுது சமூகத்தில் ஒரு நற்பிரஜையாக வாழ்வதற்கான தன்மையை பெற்றிடுதல் வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளை விட குறைவாக பெற்ற மாணவர்களில் விசேட கவனம் செலுத்துமாறும், தரம் 9 மாகாணப் பொது பரீட்சையில் 40 புள்ளிகளை விட குறைவாகபெறும் மாணவர்களுக்கும் விசேட கவனம் செலுத்தி அவர்களுடைய அடைவு மட்டங்களை அதிகரிக்க செய்யவேண்டும் எனவும் மேலும் மாணவர்களை முக்கியமான அலுவலகங்களுக்கு குறிப்பாக வங்கி, கச்சேரி, தபால் நிலையம், புகையிரதநிலையம் போன்றவற்றுக்கு அழைத்துச்சென்று அதன் செயற்பாடுகள் பற்றி அறிவூட்டும் படியும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதோடு அவர்கள் கற்பிக்கும் பாடம் மாணவர்களுக்கு ஏன் அவசியம் மற்றும் எவ்வாறு சமுக மட்டத்தில் உதவும் என்பதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு புரிய வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் முன்பள்ளிக் கல்வித்துறையை பற்றி கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள் சமூகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுடைய முக்கியபங்கை எடுத்துரைத்தார் மற்றும் தகைமை உள்ள ஆசிரியர்களை மட்டுமே முன்பள்ளி ஆசிரியர்களாக அனுமதிக்க வேண்டும் எனவும், ஆரம்பநிலை கல்வி பயின்று, பயிலாமல் பாடசாலைகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் செயற்திறன் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக விளையாட்டு துறையினுடைய கொள்கைகளை கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள் மாணவர்களுடைய கற்றல் நடவடிக்கைகளுக்கு இணையாக அவர்களுடைய விளையாட்டு துறை சார்பான ஈடுபாடும் அமையவேண்டும் எனவும், கிராம மட்டங்களிலான இளைஞர் குழுக்களை உருவாக்கி அவர்களை விளையாட்டுக் கழகங்களாக உருமாற்றி விளையாடுவதற்கான வழிமுறைகளை அமைத்துக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் பாடசாலைகளை குழுக்களாக்கி அவர்களுக்கு இடையே நட்புரீதியான விளையாட்டு போட்டிகளை நடத்தவும், பாரம்பரிய விளையாட்டுக்களை அடைப்யாளபடுத்தி கிராம ரீதியாக அதை விளையாடி அந்த கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் அதனை இணைத்து பாரம்பரிய விளையாட்டுக்களை அழியவிடாது பாதுகாக்கும் படியும் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், கலை கலாச்சார கொள்கைகள் பற்றி கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள், பாடசாலை மட்டத்திலேயே அவர்களுடைய கலைசார் திறைமைகளை அடையாளப்படுத்தி அவர்களுக்கான குழுக்களை அமைத்து திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்குமாறும், கிராம மட்டங்களில் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை எளிமையாக அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்படுத்தி அவை தொடர்ந்து நடைபெறுவதற்கு ஆவன செய்யுமாறும் பாடசாலை மாணவர்களுடைய திறமை, பாடசாலை காலம் நிறைவடைந்தவுடன் கைவிடப்படாமல் தொடர்ந்து அக் கலையை கொண்டுசெல்வதற்கு வழிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Best Online Casinos in the USA for 2023 🏆✔️ Legit US Casino Sites

இறுதியாக வடமாகாண இளைஞர் விவகார கொள்கைகளை கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாண இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை கல்வி, விளையாட்டு மற்றும் கலை கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் இல்லாமற்செய்யலாம் மற்றும் உருவாகாமல் பாதுகாக்கலாம் எனவும், தன்னார்வள இளைஞர் குழுக்களை உருவாக்கி பயனுள்ள சில முகாம்களை அவர்களூடாக நடாத்தி சமூகத்திற்கு நல்ல பல செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.