கனேடிய உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 04 யூன் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வட பகுதி சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் , வட மாகாண மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் எவ்வகையிலான துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக கனடா அரசாங்கம் வழங்கவேண்டிய உதவிகள் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டது.

மேலும், கனேடிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து யாழ்ப்பாண கல்வியில் வளர்ச்சி நிலையினை அடைவதற்கு மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் அகதிகள் பிரச்சனை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு