கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஆரம்பித்தது

வீதி அபிவிருத்தி மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் அனைத்து பொறுப்புசார் அதிகாரிகளுடன் வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்கள் விரிவாக ஆராய்ந்து சில நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைவாக 25 பெப்பிரவரி 2020 முதல் யாழ் நகரில் கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ளனர்.

 இதுவரை நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட நாய்கள் இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டதாக குறித்த நடவடிக்கைகளை வழிநடத்தும் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:
0