என்ரபிறைஸ் சிறிலங்கா கண்காட்சிக்கு ஆளுநர் விஜயம்

யாழில் இடம்பெற்றுவரும் என்ரபிறைஸ் சிறிலங்கா கண்காட்சிக்கு 08 செப்ரெம்பர் 2019 அன்று முற்பகல் விஜயம் செய்த ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு வருகைதந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடனும் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் வருகை தந்த சிலருக்கு ஜனாதிபதி செயலகத்தின் உணவு உற்பத்தி பிரிவினால் வழங்கப்படும் மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை ஜனாதிபதி அவர்களின் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் பாரத தென்னக்கோன் ஆளுநர் அவர்களுக்கும் மா மரக்கன்று ஒன்றினைய வழங்கினார்.