இலங்கை மத்தியவங்கி ஆளுநர் வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தேசமான்ய  பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஸ்மன் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்திர் 07 செப்ரெம்பர் 2020 அன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது வட மகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இலகு தவணை கடன்களை வழங்கக்கூடியவிதத்தில் வங்கிகள் செயற்பட வேண்டுமெனவும் மக்கள் இலகுவாக அணுகக்கூடிய விதத்தில் வங்கிகள் தமது கிளைகளை மேலும் விஸ்தரிக் வேண்டும் எனவும் வட மாகாண ஆளுநர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி எஸ்.மேகநாதன், இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.