இலங்கை கைத்தொழில் கண்காட்சி – 2022

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை கைத்தொழில் கண்காட்சி 2022 பெப்ரவரி மாதம் 03, 04, 05 மற்றும் 06 திகதிகளில் பணடாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஒரு விற்பனை கூடத்தில் வட மாகாண பற்றிக் உற்பத்திகள், கைத்தறி உற்பத்திகள் மற்றும் மட்பாண்ட உற்பத்தி பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் இடம்பெற்றது.

வட மாகாணத்தில் இயங்கும் நெசவு நிலையங்களில் வேலை செய்யும் நெசவாளர்களுடைய உற்பத்திகள், தனியார் பற்றிக் உற்பத்திகள் மற்றும் யாழ் மாவட்ட புடவை நெசவாளர் கூட்டுறவு சங்க உற்பத்திகள் ஆகியற்றை தொழிற்துறை திணைக்களம் ஒழுங்கமைத்து மேற்குறிப்பிட்ட நிகழ்வில் காட்சிப்படுத்தி விற்பனையும் இடம்பெற்றது.

இக்கண்காட்சி நிகழ்வானது எதிர் காலத்தில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தவதற்கு சந்தர்ப்பமாக அமைந்திருந்ததுடன் வட மாகாணத்தினுடைய உற்பத்தி திறன்களையும் வெளிப்படுத்த கூடியதாக அமைந்திருந்தது.