இந்த சமுதாயத்தின் நாளைய சிறந்த குடிமக்களாக நீங்கள் வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – ஆளுநர்

‘இந்த சமுதாயத்தின் நாளைய சிறந்த குடிமக்களாக நீங்கள் வரவேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று திருநெல்வேலி சைவ சிறுவர் அபிவிருத்தி நிலையச் சிறார்கள் இல்லத்தில் 08.10.2019 அன்று இடம்பெற்ற வாணி விழா நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இல்லச் சிறுவர்களுடன் ஆளுநர் அவர்கள் டிஜிட்டல் தொடர்பாடல் மூலம் உரையாடியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் ஆளுநர் அவர்களின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்கள் முதன்மை விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன் ஆளுநர் செயலகத்தினால் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக்ச் பொருளியல் ஆசிரியர் கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர், இணைப்புச் செயலாளர் மற்றும் ஆளுநர் செயலக பணிக்குழாமினரும் கலந்துகொண்டனர்.

Tips for Live Betting at Online Casinos - How It Works