இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர்.

கடந்த 07.10.2023 அன்று இந்திய துணைத்தூதரகத்தால் நடாத்தப்பட்ட இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ‘இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது, 400 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு பல்வேறுபட்ட துறைகளான தகவல் தொழிநுட்பம், ஆங்கிலமொழி, முகாமைத்துவம், கிராமிய அபிவிருத்தி, நிதி, தொடர்பாடல் போன்றவற்றில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சிகளையும் வழங்குவது ஒரு பொன்னான வாய்ப்பு’ என கூறியதோடு இத்திட்டத்தை செயற்படுத்துகின்ற இந்திய துணைத்தூதரகத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் இத்திட்டத்திற்கான பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என இந்தியத்துணைத்தூதரகம் இந்நிகழ்விலே உறுதி அளித்துள்ளதோடு அரச உத்தியோகத்தர்கள் இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மேலும் இந்நிகழ்விலே ஏற்கனவே கலந்து பயனடைந்த பயனாளர்களினால் பயிற்சிநெறி தொடர்பான அனுபவப்பகிர்வு உரையும் வழங்கப்பட்டது.