ஆடி அமாவாசை நிகழ்வு -2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கீரிமலை நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் 28.07.2022 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆடி அமாவாசை நிகழ்வு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்களின் வழிகாட்டலின் கீழ் ஏனைய குருமாரும் ஒன்றிணைந்து வன்முறையினால் இறந்த ஆத்மாக்களுக்கு  ஆத்மசாந்திவேண்டி  விசேட பூசை நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் ஆலய பிரதமகுருவும்,  பணிப்பாளரும் ஒன்றிணைந்து கீரிமலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் ஆத்மாக்களுக்கான தர்ப்பணம் செய்யும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆலயத்திலுள்ள  வயோதிபர்களுக்கு எமது திணைக்களத்தினால் தானம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்  திணைக்கள உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர் .