சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாவற்குளம் பகுதியில் கடந்த 09.10.2019 ஆம் திகதியன்று சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம் (Solar energy  integrated crop cultivation) தொடர்பில் பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது.

தற்காலத்தில் மிக ஆழமான நீர் முதல்களிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதற்கு இலவச சக்தியாக சூரிய சக்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிலவேளைகளின் இதன் மூலம் கிடைக்கப்பெறும் மேலதிக ஈட்டம் வீட்டுத் தேவைக்காகவும் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. இச் சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீரை குறைந்தது 40 அடி உயரத்திற்கு பெற்றுக்கொள்ள முடிவதுடன் போதியளவு சூரிய ஒளி கிடைக்கும் காலங்களில் தொடர்ச்சியாக காலை 8.30 முதல் மாலை 5.00 மணிவரை நீரைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. முகில் மூட்டத்துடனான காலங்களில் மாலை 3.00 மணி வரை நீர்ப்பம்பியை இயக்க முடிகிறது. இந் நீர்ப்பாசன முறையில் குடும்பத் தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதால் தொழிலாளர் செலவு குறைவு. அதே நேரம் மின்சாரக் கட்டணமாக செலுத்தவேண்டிய கட்டணமும் குறைவடைகிறது.