வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமானது.

இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இன்றும் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் இடம்பெறவுள்ளதுடன் , இப்பிரதேசத்திற்குள் தமது காணி உள்ளவர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரை தொடர்பு கொள்வதனூடாக தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு