ஆளுநரின் புதிய செயலாளர் நியமனம்

வடமாகாண ஆளுநரின் புதிய  செயலாளராக சி.சத்தியசீலன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு