வட மாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்கள் – வடமாகாண ஆளுநர் நடவடிக்கை

நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கௌரவ ஆளுநர் அவர்கள் பொலிசாரின் தேவைக்கு தற்காலிகமாக வாகனங்களை வழங்கும் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் இரண்டு வாகனங்கள் அவசர நிலைமையில் பொலிசார் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் காணப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக வடமாகாண சபைக்கு சொந்தமான மூன்று வாகனங்களும் பொலிசாரின் அவசர தேவைகளுக்காக தற்காலிகமாக வழங்கப்படவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையினை கவனத்தில் கொண்டு வடமாகாணத்தில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலிசார் மற்றும் முப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளக் கூடிய பாதுகாபு நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கொண்டுள்ளதுடன், பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வடமாகாணத்தின் பொதுமக்களை ஆளுநர் அவர்கள் கோரியுள்ளார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு

14.05.2019