மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிறுவனம்

wa_banner

பணிப்பாளர்

திரு.க.கமலநாதன்
பணிப்பாளர்

தொ.பே: 024 222 3585
கை.தொ.பே: 0774827298
தொ.நகல்: 0242223585
மின்னஞ்சல்: pctinp.va@gmail.com

தபால் முகவரி: இல.23, வைரவர் கோவில் வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா

 

தொலைநோக்கு:

‘வடக்கு மாகாண கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகசபை உறுப்பினர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருடன் கூட்டுறவு திணைக்களத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளையும், செயற்பாடுகளையும் வினைத்திறனான வகையில் பொறுப்புடன் மேற்கொண்டு, கூட்டுறவு நிறுவனங்களின் வளப்பயன்பாடு தொடர்பாகவும், கூட்டுறவு துறையில் உள்ள விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும் ஏனைய சிறு தொழில் முயற்சிகள் போன்ற துறைகளுடன் நெருக்கமாக பங்குபற்றி செயற்பட்டு வடக்கு மாகாணத்தின் பொருளாதார செயற்பாட்டில் கணிசமான பங்களிப்பினை வழங்குவதற்காக அவசியமான பயிற்சிகளினை வழங்கும் வளநிலையமாக செயற்படல்’

பணிக்கூற்று:

‘வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், கூட்டுறவு நிறுவனங்களின் அங்கத்தவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், கூட்டுறவு நிறுவனங்களிற்கும் அறிவு, திறன், மனப்பாங்கு போன்றவற்றினை அபிவிருத்தி செய்து வினைத்திறனும், விளைதிறனும் கொண்ட முகாமைத்துவத்தையும், ஆளுமையினையும் வலுப்படுத்தி சக்தி வாய்ந்ததும், திறமை கொண்டதுமான தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு அவசியமான கூட்டுறவு கற்பித்தல் சூழலினை உருவாக்கல்’

தொழிற்பாடுகள்:

• கூட்டுறவு உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்த பயிற்சி திட்டங்களை வழங்கல்
• கூட்டுறவுத்துறையின் வளர்ச்சி மற்றும் செயல்திறனை அதிகரிக்க பயிற்சி சாதனங்களை உருவாக்கி, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்
• கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை, நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பாக வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்குதல்
• வடமாகாணத்தின் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடையே கூட்டுறவு மதிப்புகள், வழிப்புணர்வு மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல்
• பயிற்சி திட்டங்களை மதிப்பீடு செய்து, தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை வலுப்படுத்தல்