சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல்விழா 10.04.2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி.பி.ரமணேந்திரன் அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பாக பாரம்பரிய விவசாய முறைகளுடன் நவீன மற்றும் நீடித்த தொழில் நுட்பங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நெல் அறுவடை வயல் விழா இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் திரு.க.கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவசிறி, கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சு.செந்தில்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மங்களவிளக்கேற்றலை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி நெல் அறுவடையானது விருந்தினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விவசாய பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த வீட்டுத்தோட்ட செய்கை, மரக்கறி பயிர்செய்கைகள், கிழங்கு பயிர்செய்கைகள், சின்ன வெங்காய விதை உற்பத்தி, கூட்டெரு தயாரிப்பு, மண்புழு உர உற்பத்தி, திரவப்பசளைகள், பூச்சி விரட்டிகள், நாற்று மேடை உற்பத்தி மற்றும் விவசாய இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு இவை அனைத்துக்குமான தொழில் நுட்ப விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் விவசாய தொழில் நுட்ப உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய பெருமக்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,  மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த சிறப்பு தொகுப்புகள்

1. நெல் வயல்
• பரசூட் முறை விதைப்பு
• இயந்திர நாற்று நடுகை
• வீசி விதைப்பு
• விதைப்பு முறைகளுக்கான விளைச்சல் ஒப்பீடுகளின் விளக்கம்.
• முன்மாதிரி துண்ட செய்கை.

2. சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி
• விதைப்பு முதல் அறுவடை வரையான பூரண விளக்கம்

3. வீட்டுத்தோட்டம்
• அசோலா உற்பத்தி
• மண்புழு உர உற்பத்தி மற்றும் மண்புழு திரவபசளை உற்பத்திக்கான விளக்கங்கள்
• சேதன திரவப்பசளைகள் மற்றும் பூச்சி விரட்டிகள் உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பான விளக்கம்
• ஒருங்கினைந்த பண்ணை முகாமைத்துவம் பற்றிய விளக்கம்

4. சோளப் பயிர்செய்கைஇ கத்தரி பயிர்செய்கைஇ வெண்டி பயிர்செய்கை
• மஞ்சள் நிற பூச்சி விரட்டியின் பயன்பாடு பற்றிய விளக்கம்
• நீர் முகாமைத்துவம் (வரட்சி காலத்தில் மூடுபடையின் பயன்பாடு)
• களை கட்டுப்பாடு (வைக்கோலினாலான மூடுபடை)

5. பாகல் பயிர்செய்கைஇ புடோல் பயிர்செய்கை
• பொறிமுறைக் கட்டுப்பாடு
• காய்களிற்கு பொலித்தீன் உறையிடல் (பழ ஈ இன் தாக்கத்தினை கட்டுப்படுத்த)
• புரதப்பொறி வைத்தல்
• மஞ்சள் ஒட்டும் அட்டையின் பயன்பாடு
• பூசணி குடும்ப தாவரங்களில் ளுpழழn நேவ இன் செல்வாக்கு

6. குரக்கன் பயிர்செய்கை பற்றிய விளக்கம்

7. பல்வேறு வகையான நாற்றுமேடை தொழில் நுட்பங்கள் காட்சிப்படுத்தல் மற்றும் அது தொடர்பான விளக்கங்கள்

8. விவசாய இயந்திரங்களை காட்சிப்படுத்தல் மற்றும் அதற்கான விளக்கங்களை வழங்குதல்
இவ்வயல் விழாவினை பண்ணை முகாமையாளர் சௌ.தயாளசீலன் மற்றும் பயிற்சி நிலைய ஏனைய உத்தியோகத்தர்களும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர்.