யாழ் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் வர்க்கங்கள் மற்றும் சிவப்பு நெல் வர்க்கங்கள் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் இம்முறை கைதடி விவசாயப்போதனாசிரியர் பிரிவில் நாவற்குழி கிழக்கில் திரு தங்கராஐh அவர்களின் வயலில் Ld-368 சிவப்பு சம்பா 3 ½ மாத வயது வர்க்கம் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் பரீட்சார்த்த ரீதியில் விதை உற்பத்தியாக மேற்கொள்ளப்பட்டது. இதன் அறுவடை விழா 03.02.2026 அன்று கைதடி விவசாயப்போதனாசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி.சு.செந்தில்குமரன் மாகாண விவசாயப்பணிப்பாளர்(வ.மா) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.அ.சிறிரங்கன்இ யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர், திருS.செல்வகுமார் பிரதி விவசாயப்பணிப்பாளர், விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை நிலையம் பரந்தன், திரு. இ.சஞ்சீவன், பிரதி விவசாயப்பணிப்பாளர், விதை நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.கி.சிவதீபன், மன்னார் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.பி.றமணேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் விவசாயப்போதனாசிரியர்கள், விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை நிலையத்தின் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ்வறுவடை நிகழ்வில் யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் அவர்கள் தனது தலைமையுரையில் Ld-368 இன் சிறப்பியல்புகள் குறித்து விபரித்தார் குறிப்பாக இவ்வர்க்கமானது Ld-308 எனும் சம்பா அரிசியினை போன்று சிறிய வட்ட வடிவாக காணப்படுவதுடன் சிவப்பு சம்பாவாக காணப்படுவதால் சிவப்பரிசிக்கு மாற்றீடாக பயன்படுத்த முடியும். மேலும் சமையலின்போது அதிக சுவையுடையதாக காணப்படுவதாக தெரிவித்தார் அத்துடன் எரிபந்த நோய், பற்றீரியா இலை வெளிறல், கபில நிற தத்தி இகொப்புள ஈ ஆகியவற்றினை தாங்கி வளரக்கூடியதாக காணப்படுவதால் விவசாயிகள் இதனை வெற்றிகரமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்கள் தனது உரையில் மத்திய மற்றும் மாகாண விவசாயத்திணைக்களங்களினால் புதிய முயற்சிகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிமுகங்களை விவசாயிகளிடத்தில் கொண்டுசெல்வதற்கு விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியமானதாகும் எனவும் தரமான விதை நெல் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் கருத்துரைத்தார். மேலும் இவ்விதையுற்பத்தியின் மூலம் விவசாயிகள் அதிகவருமானத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத்தெரிவித்தார்.
கலந்துகொண்ட விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் Ld -368 செய்கை பண்ணப்பட்ட நெல் வயல் துண்டத்தினை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும் இவ்வர்க்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் விதை உற்பத்தியின்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பாக திரு S.செல்வகுமார், பிரதி விவசாயப்பணிப்பாளர், விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை நிலையம் பரந்தன், மற்றும் திரு. இ.சஞ்சீவன், பிரதி விவசாயப்பணிப்பாளர் விதை நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையம் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இவ்விதையுற்பத்தி துண்டத்தில் நோய் பீடைத்தாக்கங்கள் மிகக்குறைவாக காணப்பட்டதுடன் 55 புசல்(1127 கி.கி) தரமான விதைநெல் அறுவடைசெய்யப்பட்டது. எனவே இவ்வர்க்கமானது எமது பகுதியில் செய்கைபண்ணுவதற்கு பொருத்தமான நெல்வர்க்கமாக உள்ளது. மேலும் தரமான விதையுற்பத்தி மற்றும் தரமான விதை நெல் பயன்பாட்டின் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தினை பெற்றுக்கொள்வதுடன் பரவி வரும் களை நெல்லினையும் கட்டுப்படுத்தமுடியும்.






