வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று திங்கட் கிழமை காலை (29.12.2025) ஆளுநர் கையளித்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.