வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பொதுமக்களை நேரில் சந்திக்கும் வாராந்த ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது என்பதைப் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

எனினும், அதற்கு அடுத்த வார திங்கட்கிழமை (22.12.2025) வழமை போன்று ஆளுநர் செயலகத்தில் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும்.

எனவே, பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்திற் கொண்டு, தமது வருகையைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.