சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் விசேட அறிவுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தில் இயங்கி வரும் முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அந்தந்தப் பிரதேசங்களில் நிலவும் இடர் நிலைமை மற்றும் வானிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது அல்லது தொடர்ந்து நடத்துவது தொடர்பான தீர்மானங்களை அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்வதற்கு, ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அந்தந்தப் பிரதேசத்தின் சூழலுக்கேற்ப உடனடித் தீர்மானங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்ளமுடியும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.