கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார்.
யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை காலை (12.11.2025) இந்த நிகழ்வு நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய ஆளுநர், 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் நூல் நிலையம் எரிக்கப்பட்டது என்றும் இது மிகப்பெரிய துன்பியல் சம்பவம் எனவும் குறிப்பிட்டார். சமூகங்களுக்கு இடையிலான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான புத்தக கையளிப்பு நிகழ்வுகள் உதவும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், யாழ். மாவட்டச் செயலர், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.







