வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14.10.2025) நடைபெற்றது.
விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், நீர்பாசனத் திணைக்களம் என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டன. ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றம், இடர்பாடுகள் தொடர்பில் ஆளுநரால் தனித்தனியாக கவனம் செலுத்தப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கால்நடை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், மாவட்ட பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.