மகளிர் விவகார அமைச்சின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது.

மகளிர் விவகார அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம் என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன. திட்டங்களை முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் மற்றும் அதற்குத் தீர்வுகள் என்பனவும் வழங்கப்பட்டன.

கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.