வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள், பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (26.08.2025) இடம்பெற்றது.
மாவட்டச் செயலரின் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
காணி வழங்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் ஆராயப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனையடுத்து, பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதிக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், க.செல்வம்அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், ம.ஜெகதீஸ்வரன், கே.காதர் மஸ்தான், து.ரவிகரன், ஐ.முத்து மொஹமட் ஆகியோரும், கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலக நிர்வாக அலுவலர்கள், பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.