கௌரவ ஆளுநருக்கும், யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட் கிழமை மாலை (04.08.2025) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அதன் ஊடாக கிடைத்த பெறுபேறுகள் மற்றும் பாடசாலையை வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டு செல்வதற்காக எடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் அதிபரால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வளங்களை, மாகாணப் பாடசாலைகளுடன் பகிர்ந்து எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துரையாடலில் பங்குகொண்டிருந்தார்.