வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின்; ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025.07.17 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வ-பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை குழுமத்தால் வெகு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி விழாவில் கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் பிரதம விருந்தினராகவும்,  வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.த.முகுந்தன் அவர்களும்,  பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி.லா.நிருபராஷ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர். கௌரவ விருந்தினர்களாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.வ.தட்சாயினி அவர்களும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.இ.வீரசிங்கம் அவர்களும்,  பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.சா.ப.போல் அமல்ராஜ் அவர்களும், திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.இ.ஜெனால்ட் அன்ரனி அவர்களும், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ந.ச.செல்வரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் அயல்பாடசாலை அதிபர்களும், பண்பாட்டலுவல்கள் அலகின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை மாணவர்களது கோலாட்டம், கும்மி போன்ற பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஆடிப்பிறப்பும், தமிழ் பாரம்பரியமும் தொடர்பான பல்வேறு வகையான ஆற்றுகைகள் மாணவர்களால் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான பரிசில்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவருக்கும் ஆடிக்கூழ், கொழுக்கட்டை பரிமாறப்பட்டு பிற்பகல் 12.30மணிக்கு நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.