மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் 2025 ஆம் ஆண்டுக்கான ஊர் சுற்று ஓட்டப் போட்டி (Cross Country Race ) கடந்த 2025.02.23 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றது. ,ந் நிகழ்வில் வடமாகாணத்தின் யாழ் மாவட்டம் சார்பாக 10 ஆண் 06 பெண் போட்டியாளர்களும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக 10 ஆண் 06 பெண் போட்டியாளர்களும் முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக 10 ஆண் 05 பெண் போட்டியாளர்களும் வவுனியான மாவட்டம் சார்பாக 09 ஆண் 03 பெண் போட்டியாளர்களும் மன்னார் மாவட்டம் சார்பாக 05 ஆண் 04 பெண் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
போட்டி அன்றைய தினம் காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி 8.30 மணியளவில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன. மாகாண மட்டத்தில் ஆண்கள்; அணி சார்பில் கிளிநொச்சி மாவட்டம் அணி சம்பியனாகவும், வவுளியா மாவட்ட அணி 2 ம் ,டத்தையும் 3 ம் ,டத்தை யாழ்ப்பாண அணியும் பெற்றுக்கொண்டனர். பெண்கள் அணி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அணி சம்பியனாகவும் 2ம் ,டத்தை முல்லைத்தீவு மாவட்ட அணியும் 3 ம் ,டத்தை கிளிநொச்சி மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆண் போட்டியாளர்களில்
முதலாமிடம் Mr. I. Vikirthan – Vavuniya
இரண்டாமிடம் Mr. S.Keeran – Kilinochchi
மூன்றாமிடம் Mr.K.Jeyanthan – Jaffna
பெண் போட்டியாளர்களில்
முதலாமிடம் Ms. J.Anita – Mullaitivu
இரண்டாமிடம் Ms. R.Thanushiya – Jaffna
மூன்றாமிடம் Ms. S.Archaya – Mannar
இப் போட்டியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்களில் முதல் 10 போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களில் முதல் 06 போட்டியாளர்களும் எதிர்வரும் 15.03.2025 ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெறவுள்ள 49 வது தேசிய விளையாட்டு விழா ஊர்சுற்று ஓட்டப் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.