யாழ் மறை மாவட்ட ஆயரின் குருத்துவபொன்விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களும் கலந்துக் கொண்டார்

யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் 50 ஆவது குருத்துவ சேவைக்கான பொன்விழா நேற்று (24/04/2024) மாலை நடைபெற்றது. யாழ் ஆயர் இல்ல வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துச் சிறப்பித்தார்.

யாழ் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற விசேட ஆராதனைகளின் பின்னர் ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் குருத்துவ சேவைக்கான கௌரவமளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.