வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திரு. இலட்சுமணன் இளங்கோவன் பதவியேற்றார்

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக திரு. இலட்சுமணன் இளங்கோவன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நியமனத்தினூடாக 15 மாச் 2024 அன்று வடக்கு மாகாண சபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், மாகாண சபை வளாகத்திலுள்ள அலுவலக உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பிரதம செயலாளர் அவர்களை பாரம்பரிய முறையில் வரவேற்றனர்.

பிரதம செயலாளர் அவர்கள் சமய அனுட்டாணங்களுடன் காலை 9:20 மணியளவில் அமைந்த சுபநேரத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர்கள் புதிய பிரதம செயலாளருக்கு தமது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

புதிய பிரதம செயலாளர் அவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து தனது கடமையேற்றல் கடிதத்தை கையளித்தார்.