வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 1253 நோயாளர்களிற்குகான கண் புரை சத்திரசிகிச்சை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. மன்னார், வவுனியா முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களைச்சேர்ந்த நோயாளிகள் இம் முகாமினால் பயன் பெற்றனர்.
இம்முகாமானது கௌரவ வடமாகாண ஆளுநரின் வழிகாட்டலுடனும் இந்திய துணை தூதரகத்தின் பங்களிப்புடனும் நடைபெற்றது. இதற்கான முழு அனுசரனைகளையும் மலேசிய ஆலக்கா மற்றும் ஆனந்த மன்றங்கள் (Alaka and Ananda Foundation) வழங்கியதுடன் இதற்கான ஒருங்கிணைப்பினை Assist RR ( UK & SL) நிறுவனம் மேற்கொண்டது. சத்திர சிகிச்சைகளை இந்திய நாட்டைச் சேர்ந்த மூன்று கண் சத்திர சிகிச்சை சிபுணர்களும் எமது நாட்டைச்சேர்ந்த மூன்று கண் சத்திர சிகிந்சை நிபுணர்களும் மேற்கொண்டனர். இச் சிகிச்சை முகாம் வெற்றிபெற பங்களித்த அனைவருக்கும் வடமாகாண சுகாதார திணைக்களம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.