வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம், கல்வித் திணைக்களத்தின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக் கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பவற்றுடன் இணைந்து நடாத்திய வட மாகாண நவராத்திரி விழா 2022.10.05 (புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் கல்வி அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலை முன்றலில் நடைபெற்றது.
ஆலய வழிபாட்டோடு நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து யாழ். வலயக்கல்வி பணிப்பாளர் திரு.மு.ராதாகிரு~;ணன் அவர்களால் ஏடு தொடக்குதல் வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சாரங்கா இசைமன்ற மாணவர்களால் குழுஇசை இசைக்கப்பட்டது. யாழ். வலயக் கல்வி பணிப்பாளர் அவர்களின் ஆன்மீக உரையைத் தொடர்ந்து அரியாலை பிருந்தாவனம் கலாமன்ற மாணவர்களின் குழு நடனமும், சாரங்கா இசைமன்ற மாணவியின் தனி இசையும் விழாவினை சிறப்பித்தன.
அதனைத் தொடர்ந்து வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் “வாழ்க்கை வாழ்வதற்கே” எனும் தலைப்பிலே சிறப்பான ஆன்மீக சொற்பொழிவொன்றினை ஆற்றினார். இசை நிகழ்ச்சி வழங்கிய மாணவர்களுக்கு பிரதிப்பணிப்பாளர் அவர்களினால் பரிசில்கள் வழங்கப்பட்டன. அரியாலை பிருந்தாவனம் கலாமன்ற மாணவர்களினால் ஸ்ரீ நாட்டிய லக்ஷன கதம்ப நடனம் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில்கள் வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு.ஆ.பற்றிக் டிரஞ்சன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கத்தினால் நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அவற்றை வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்இ வலயக்கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர், கல்வித் திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.
தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அவர்களினால் நடன நிகழ்வினை நெறியாள்கை செய்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவன் திரு.வி.வி~;ணுஜன் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவூ இடம்பெற்றது. ஆன்மீகச் சொற்பொழிவை ஆற்றிய மாணவனுக்கு கல்வி அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தரினால் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக மதிய விருந்துபசார நிகழ்வினைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களின் இசை நிகழ்ச்சியூடன் நிகழ்வானது பிற்பகல் 4.45 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.