தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களம் வடமாகாணம் ILO நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் LEED+ செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக (Second Phase)  பயனாளிகளான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை (MSME) சந்தைப்படுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் வியாபார அபிவிருத்தி தொடர்பாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு இரண்டு கட்டமாக 20.07.2022 தொடக்கம் 22.07.2022 வரை மூன்று நாட்களும் மற்றும் 17.08.2022 தொடக்கம் 18.08.2022 வரை இரண்டு நாட்களும் Green Grass Hotel, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மேலும் முதலாம் பிரிவின் (Batch) இறுதி நாள் (22.07.2022) மதியம் பிரதம செயலாளருடன் மாகாணப் பணிப்பாளர், தொழிற்துறை திணைக்களம், வட மாகாணம் அவர்களும் இரண்டாம் பிரிவின் (Batch) இறுதி நாள் (18.08.2022) மதியம் மாகாணப் பணிப்பாளர், தொழிற்துறை திணைக்களம், வட மாகாணம் அவர்களும்  கலந்து கொண்டு பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களினை வழங்கினர்.

20.07.2022 தொடக்கம் 22.07.2022 வரை நடைபெற்ற பயிற்சிக் கருத்தரங்கு

17.08.2022 தொடக்கம் 18.08.2022 வரை நடைபெற்ற பயிற்சிக் கருத்தரங்கு