வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் தீபாவளிக்கு தீபங்களின் வரிசை என்பது பொருளாகும்.

உலகில் உள்ள சகல இந்துக்களும் இத்தினத்தை பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பண்டைய காலத்திலிருந்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன ஒரு கொண்டாட்டமாகும்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது .

இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து ஒளிமயமான வாழ்வு பிரகாசிக்க வேண்டும் என்று தீபங்களால் எம் மனங்களில் விளக்கேற்றுவோம்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனாப் பரவல் காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாகி மீண்டுவருகின்ற இப்படிப்பட்ட ஒரு வேளையில் இந்நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும் ஒற்றுமையாகவும் ஐக்கியத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டுமென கூறி சகலருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கெளரவ ஜீவன் தியாகராஜா
ஆளுநர், வட மாகாணம்.