தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது.

நேற்றைய தினம் (2021.09.09) யாழ் மாவட்டத்துக்கான களவிஜயத்தை மேற்கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் யாழில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக பார்வையிட்டார்.

இவ் விஜயத்தின் போது, வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்ட தாளையடி தபால் நிலையத்திற்கான ஆவணத்தை கௌரவ அமைச்சர் அவர்கள் தபால்மா அதிபர் மதுமதி வசந்தகுமாரிடம் கையளித்தார்.