கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து ”பேண்தகு கல்விக் கொள்கைச் சட்டகமொன்றை” உருவாக்குவதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ”டிஜிடல் தளம்” ஒன்று ”அறிவையும் மனதையும் போஷிக்கும் முழுமையான கல்வியை நோக்கி” என்னும் கருப்பொருளுடன் உத்தியோகபூர்வமாக 26 மார்ச் 2021 அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் 03 மாதங்கள் www.egenuma.moe.gov.lk எனும் இணையதளம் மூலம் மக்கள் புதிய கல்வி மறுசீரமைப்பிற்கான கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அனுப்பிவைக்க முடியும். முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி, தொழில் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, உயர் மற்றும் தொழிற் கல்வி என்ற பிரதான 04 உபதுறைகளின் கீழ் மறுசீரமைப்பு ஆலோசனைகளை முன்வைக்கமுடியும்.
புதிய டிஜிடல் தளம் ஆரம்பித்துவைக்கப்பட்ட அதேநேரத்தில் அனைத்து மாகாணங்களில் இருந்தும் நிகழ்நிலையில் மாகாண உயார் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், மத தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் வட மாகாணத்தில் , பிரதம செயலாளர் திரு. அ. பத்திநாதன் அவர்கள் தலைமையில் , சர்வமத தலைவர்கள், மகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள் மற்றும் கல்விப்புல ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வு மாகாணக் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.