2025 PSDG நிதியீட்டத்தின் கீழ் வட மகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அச்சுவேலி மருந்து உற்பத்திப் பிரிவிற்கு புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் தேவைகருதி அவற்றினை பார்வையிடுவதற்காக தியத்தலாவையில் அமைந்துள்ள ஊவா மாகாண ஆயுள்வேத திணைக்களத்தின் மருந்து உற்பத்திப் பிரிவிற்கு எமது மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் 25,26,27 /06/2025 ம் திகதிகளில் சென்றிருந்தனர். அங்கு பயன்பாட்டில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பார்வையிட்டதுடன் அவற்றின் பயன்பாடு இயங்கு முறைகள் என்பவற்றையும் கேட்டறிந்து கொண்டனர். இதில் அச்சுவேலி மருந்து உற்பத்திப் பிரிவின் மருத்துவப் பொறுப்பதிகாரி, ஆயுள்வேத வைத்திய உத்தியோகத்தர், மாகாண சுகாதாரத்திணைக்களத்தின் இயந்திரப் பொறியியலாளர், திட்டமிடல் நிகழ்ச்சித்திட்ட அலுவலர் மற்றும் சுதேச மருத்துவத்திணைக்கள கணக்காளர் என்பவர்கள் கலந்துகொண்டனர்.